சூப்பர் சிங்கரின் சிறப்பு நடுவர் ஆனார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
29 ஜன,2017 - 11:57 IST
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியின் 5வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பாடி தங்கள் திறமையைகாட்டி உள்ளனர். தற்போது இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான போட்டி நடந்து வருகிறது.
இதன் நடுவர்களாக சின்னக்குயில் சித்ரா, மால்குடி சுபா மற்றும் பாடகர் மனோ இருந்து வந்தனர். இவர்களோடு இறுதி சுற்றில் பாடும்வானம்பாடி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறப்பு நடுவராக கலந்து கொள்கிறார். அவருடன் எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.சைலஜாவும் பங்கேற்கிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிமணியம் அவ்வப்போது பாடல்களை பாடி பங்கேற்பாளர்களையும், ஆடியன்சையும் உற்சாகப்படுத்த இருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடுவராகியிருப்பதன் மூலம் நிகழ்ச்சி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இனி நிகழ்ச்சி புதிதாக களைகட்டும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment