என்னோடு விளையாடு படத்திற்காக காத்திருக்கும் சிகை!
24 ஜன,2017 - 08:53 IST
அருண் கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னோடு விளையாடு. குதிரை ரேஸை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் பரத், கதிர் நாயகர்களாக நடித்துள்ளனர். சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி நாயகிகளாக நடிக்க, ராதாரவி, ஆத்மா வில்லன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்து படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதமாகி வருகிறது.
இதன்காரணமாக கதிர் சிங்கிள் நாயகனாக நடித்துள்ள சிகை படத்தை ரிலீஸ் செய்வதால் தாமதம் செய்து வருகிறார்கள். என்ன காரணம்? என்று கேட்டால், சிகை படத்தில் நடிப்பதற்கு முன்பே என்னோடு விளையாடு படத்தில் கமிட்டாகி நடித்து விட்டாராம் கதிர். அதனால் அதற்கு பிறகு கமிட்டாகி நடித்த படத்தை முன்பே வெளியிட்டால், ஏற்கனவே நடித்த படத்திற்கான வேல்யூ கம்மியாகி விடும் என்பதால் அந்த படம் வெளியான பிறகுதான் சிகை படத்தை வெளியிட வேண்டும் என்று வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment