Tuesday, January 24, 2017

அஜித்தால் வாய்ப்பு இழந்தவருக்கு வாய்ப்பளித்த ஆர்யா

director nandha periyasamyஆஞ்சநேயா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் போலீஸ் ஆக நடித்திருந்தார் அஜித்.


ஆனால் இப்படங்களுக்கு முன்பே ஒரு படத்தில் அஜித் போலீஸ் ஆக நடிக்க ஒப்புக் கொண்டு சில நாட்களில் சூட்டிங்கிலும் கலந்துக் கொண்டாராம்.


ஆனால் அப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.


அதுபற்றிய தகவல்கள் தற்போது அப்பட இயக்குனரால் இணையங்களில் வலம் வருகிறது.


அவர்தான் இயக்குனர் நந்தா பெரியசாமி. அஜித் நடித்த மகா என்ற படத்தை இயக்கினார்.

இதன் சூட்டிங் இடையில் அஜித்துக்கு விபத்து ஏற்படவே சூட்டிங் நிறுத்தப்பட்டதாம்.


அதன் பின்னர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்படவே அப்படம் முற்றிலும் கைவிடப்பட்டது.


இதனால் இயக்குனராக அறிமுகம் ஆக வேண்டிய நந்தா பெரியசாமியால் முடியவில்லை.


அதன்பின்னரே ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.


அஜித்தை இயக்கியிருந்தால் இன்று தன் நிலை உயர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Ajiths first cop movie dropped updates

0 comments:

Post a Comment