Monday, January 23, 2017

தனது முந்தைய சாதனையை முறியடித்தார் துல்கர் சல்மான்..!


தனது முந்தைய சாதனையை முறியடித்தார் துல்கர் சல்மான்..!



24 ஜன,2017 - 10:15 IST






எழுத்தின் அளவு:








கடந்த வியாழனன்று கேரளாவில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமொண்டே சுவிசேஷங்கள்' படம் மிக ஆரவாரமாக ரிலீசாகியுள்ளது. சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தில் துல்கரின் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒருமாத தியேட்டர் ஸ்டிரைக் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முதல் படமாக இது ரிலீசானதால் படத்திற்கு கூடுதலாக எதிர்பார்ப்பும் இருந்தது. படம் எதிர்பாத்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி தராவிட்டாலும் கூட முதல்நாள் ஒப்பனிங் கலெக்சனாக 2.71 கோடி ரூபாய் வசூலித்துள்ளத இதற்குமுன் கடைசியாக வெளியான துல்கரின் 'கலி' திரைப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று அவரின் முந்தைய படமான 'சார்லி'யின் வசூல் ரெக்கார்டை முறியடித்தது..

சார்லியின் முதல் நாள் வசூல் 2.06 கோடி. 'கலி'யின் வசூலோ 2.33 கோடி.. அப்போதே துல்கரின் சாதனையை அவரே முறியடித்துவிட்டார் என சொல்லலாம். ஆனால் அதை தொடர்ந்து வெளியான 'கம்மட்டி பாடம்' அவரது முந்தைய சாதனையை முறியடிக்க தவறியது.. இப்போது வெளியாகியுள்ள 'ஜோமொண்டே சுவிசேஷங்கள்' படம் துல்கர் நடித்த முந்தைய படங்களின் முதல்நாள் கலெக்சனை முறியடித்துள்ளதால் துல்கரின் ரசிகர் வட்டாராம் செம குஷியில் இருக்கிறார்கள்.

இதுநாள்வரையிலான முதல்நாள் ஓப்பனிங் கலெக்சனில் மோகன்லாலின் 'புலி முருகன்' படம் 4.08 கோடி வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது.


0 comments:

Post a Comment