Tuesday, January 24, 2017

பெரிய படங்களில் மட்டும் நடிக்கிறேன்: சத்யன்

பல்வேறு படங்களில் விதம் விதமாக நடித்து கலகலப்பூட்டி வருபவர் சத்யன். இப்போது குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிக்கிறார். இதுபற்றி கேட்டபோது…

“நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பெரிய படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக் கிறேன்.

சமீபகாலமாக சிறிய படங்களில் நடித்தால் அதில் பல படங்கள் திரைக்கே வருவது இல்லை. இதனால் எனது உழைப்பு வீணாகி விடுகிறது. எனவே தான் சிறிய படங்களை நான் ஏற்க இயலவில்லை.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் முழுக்க முழுக்க சூர்யாவுடன் வரும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறேன். விஜய்யின் 61-வது படத்தில் அவருடைய நண்பனாக நடிக்கிறேன்.

இப்போது விஜய், சூர்யா படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறேன். இது போன்ற பெரிய நடிகர்கள், பெரிய டைரக்டர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.

0 comments:

Post a Comment