Tuesday, January 24, 2017

கவர்ச்சியாக நடிக்கவே அழைக்கிறார்கள்: சுனைனா

மும்பை வரவு சுனைனா. இவர் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசில்லாமணி’, ‘பாண்டி ஒலி பெருக்கி நிலையம்’ உள்ளிட்ட படங்களில் குடும்பங்காக கவர்ச்சியாக நடித்திருக்கிறார். ‘வம்சம்’, ‘நீர்பறவை’ படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் 2-வது கதாநாயகியாக வந்தார்.

தற்போது சமுத்திரக்கனி இயக்கி நடித்து வரும் ‘தொண்டன்’ படத்தில் சமுத்திரகனி ஜோடியாக சுனைனா நடிக்கிறார். வேறு சில புதிய படங்களிலும் நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது பற்றி கூறிய சுனைனா…

“இப்போது இயக்குனர்கள் எல்லாம் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கத்தான் அழைக்கிறார்கள். இனி அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. சமுத்திரக்கனி சாருடன் நல்ல வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது போன்ற நல்ல பாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்றார்.

0 comments:

Post a Comment