கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான படம் துருவங்கள் பதினாறு.
கார்த்திக் நரேன் இயக்கிய இப்படத்தில் ரகுமான் நடித்திருந்தார்.
படம் வெளியானது முதல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
இப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் இப்படி ஒரு படத்தை பார்த்தது இல்லை என்றார்.
இவரை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரும் படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை பாராட்டியுள்ளதோடு, தன் அலுவலகத்திற்கு அழைத்து நேரிலும் தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
0 comments:
Post a Comment