Tuesday, January 3, 2017

மல்டி ஹீரோ கதைகளில் ஆர்வம் காட்டும் விஜய்சேதுபதி!


மல்டி ஹீரோ கதைகளில் ஆர்வம் காட்டும் விஜய்சேதுபதி!



03 ஜன,2017 - 16:33 IST






எழுத்தின் அளவு:








கதைகளை தேர்வு செய்வதில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்ட விஜய்சேதுபதி, தான் நடிக்கும் படங்களில் தான் மட்டுமே முக்கியத்துவம் பெற வேண்டும் என்றில்லாமல், மற்ற நடிகர் நடிகைகளும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பார். அந்த வகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்திலேயே தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த நண்பர்களே அதிகமாக பேசி நடிக்க, தான் மெளனமாகவே நடித்திருந்தார். அதேபோல் தனக்கென ஒரு வியாபார வட்டம் உருவான பிறகும் ரம்மியில் இனிகோ பிரபாகரனுக்கு நண்பனாக நடித்தார். பின்னர், ஆர்யாவுடன் புறம்போக்கு, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹாவுடன் இறைவி என பல மல்டி ஹீரோ கதைகளில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது தனுஷின் வடசென்னையில் நடிப்பவர். மாதவனுடன் இணைந்து விக்ரம்வேதா படத்திலும், டி.ஆருடன் கவண் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சில மல்டி ஹீரோ கதைகளை கேட்டுள்ள விஜய்சேதுபதி, சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு, மேல்தட்டு ஹீரோக்களான அஜீத், விஜய், சூர்யா படங்களாக இருந்தால் வில்லத்தனமான வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறிவருகிறாராம் விஜய்சேதுபதி.


0 comments:

Post a Comment