நானும், பிரபுதேவாவும் சகோதரர்கள் போன்றவர்கள் : சோனு சூட்
04 ஜன,2017 - 15:21 IST
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என்று பல திறமைகளுடன் தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருப்பவர் பிரபு தேவா. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‛தேவி'. இப்படம் ஹிந்தியிலும் ‛துதக் துதக் துத்தியா' என்ற பெயரில் வெளியானது. இந்தப்படத்தில் பிரபுதேவாவுடன் பிரபல நடிகர் சோனு சூட்டும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனு சூட், மீண்டும் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுப்பற்றி சோனு சூட் மேலும் கூறியதாவது... "நானும் பிரபுதேவாவும் மீண்டும் இணைந்து நடிக்க ஒரு நல்ல கதைக்காக காத்திருக்கிறோம். நல்ல கதை அமைந்தால் உறுதியாக நடிப்போம். எங்களுக்கு இடையேயான உறவு ஒரு அண்ணன் - தம்பி உறவு போன்றது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்கிறோம்'' என்றார்.
சோனு சூட் தற்போது ‛குங் பூ யோகா ' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment