தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த ’இன்டோ சினி அப்ரிசிசேஷன்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை மாநகரில் நடத்தி வருகிறது.
அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்கி (ஜனவரி 5) முதல் 12-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சென்னை கேசினோ தியேட்டரில் நடைபெறும் இவ்விழாவில் 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில் நடிகை சுஹாசினி சினிமாவிற்கென சின்னம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் இன்று மனு கொடுத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் “திரைப்படங்களின் நினைவாக சினிமாவிற்கென சின்னம் உருவாக்க வேண்டும். சினிமா அருங்காட்சியகம், பழைய திரைப்படங்களை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுத்துள்ளேன்” என்றார்.
0 comments:
Post a Comment