வயதானாலும் நயன் தான் டாப்!
05 ஜன,2017 - 00:06 IST
கோலிவுட்டை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவுடன் தான், நயன்தாரா இருக்கிறார் போலிருக்கிறது. இந்தாண்டில், தமிழை தவிர, வேறு எந்த மொழியிலும் நடிப்பது இல்லை என்ற பாலிசியை பின்பற்றுகிறாராம். அறம், இமைக்கா நொடிகள், டோரா, கொலையுதிர்காலம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர், திரையுலகிற்கு அறிமுகமாகி, 13 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. இதையொட்டி, வழக்கமான ஹீரோயினாக இல்லாமல், அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம். வயது அதிகரிக்க அதிகரிக்க, நயன்தாராவுக்கு கிராக்கி அதிகரிப்பது தான், ஆச்சரியமான விஷயம்.
Advertisement
0 comments:
Post a Comment