Monday, January 9, 2017

தல57 ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்



தல57 ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்








வீரம் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே அப்படத்தின் பூஜை நடத்தப்பட்டு படத்தின் தலைப்பையும் அறிவித்தனர். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த என்னை அறிந்தால், வேதாளம் படங்களின் டைட்டில் கிட்டத் தட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அறிவிக்கப்பட்டது. இதில் வேதாளம் படத்தின் டைட்டீல் அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் பின் னர் அதை ஏற்றுக்கொண்டார்கள்.


இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, ஐதராபாத் என நடைபெற்று வரும் நிலையில், தற்போது 75 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள் ளது. மேலும், இந்த படம் குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடாமல் வைத்திருக்கும் நிலையில், பொங்கலுக்கு அப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது குடியரசு தினத்தன்று தல 57வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இதனையடுத்து வழக்கம் போல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment