மீண்டும் குணசித்ர வேடத்தில் சூரி!
08 ஜன,2017 - 09:59 IST
சந்தானம் ஹீரோவான பிறகு முன்னணி காமெடியன் பட்டியலில் இருப்பவர் சூரி. தற்போது கைநிறைய படங்களில் நடித்து வரும் அவரையும் சிலர் ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கிய மாவீரன் கிட்டு என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் சூரி. அதனால் விஷ்ணுவின் நண்பராக காமெடி செய்திருப்பார் சூரி என்று எதிர்பார்த்து அந்த படத்தைப் பார்த்தவர்களுக்கு சூரியை எதிர்பார்க்காத கேரக்டரில் பார்த்தது ஆச்சர்யத்தைக்கொடுத்தது.
இந்த நிலையில், தற்போது சமுத்திரகனி இயக்கி நடித்து வரும் தொண்டன் படத்திலும் காமெடி அல்லாத ஒரு கேரக்டரில் நடிக்கிறார் சூரி. மாவீரன் கிட்டு படத்தில் எப்படி நடித்திருந்தாரோ அதேபோன்று கதைக்கு திருப்புமுனை தரக்கூடிய ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். தொடர்ந்து பல படங்களில் காமெடி யனாக நடிக்கும் சூரியே இந்த மாதிரி வேடத்தை விரும்பி ஏற்று நடிக்கிறாராம். மேலும், சூரிக்கு காமெடியில் வேலை இல்லாததால் தொண்டன் படத்தில் ஆம்புலன்ஸ் கிளீனராக நடித்துள்ள கஞ்சா கருப்புவுக்கு காமெடி காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். தர்மதுரைக்குப்பிறகு இந்த படத்தில் கூடுதல் காமெடி காட்சிகள் தனக்கு கிடைத்திருப்பதால் மீண்டும் தனது காமெடி மார்க்கெட் சூடு பிடித்து விடும் என்று உற்சாகத்தில் காணப்படுகிறார் கஞ்சா கருப்பு.
0 comments:
Post a Comment