விஜய்யுடன் நடித்தது பெருமையாக உள்ளது! - சசி ராஜேந்திரன்
17 ஜன,2017 - 08:39 IST
விஜய் நடித்து வெளியாகியுள்ள பைரவா படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் மருமகனாக நடித்தவர் சசி ராஜேந்திரன். இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ள போதும், விஜய் படம் என்பதால் எந்தமாதிரியான கேரக்டர் என்றுகூட கேட்காமல் விரும்பி நடித்தேன் என்கிறார் சசி ராஜேந்திரன்.
அவர் மேலும் கூறும்போது, நான் ஏற்கனவே உயிர்மொழி, நே ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டி ருக்கின்றன. அதேபோல் தெலுங்கில் கலையுகா என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். இந்தநிலையில், விஜய் சாரின் பைரவா படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. அந்த வகையில், நான் நடித்த முதல் படமாக பைரவா அமைந்திருக்கிறது. இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனின் மருமகன் வேடத்தில் நடித்தேன். ஒரு பாடல் காட்சியிலும் நடித்தேன். அதனால் கவனிக்கப்படும் நடி கராகியிருககிறேன்.
மேலும், பைரவா படத்தில் நடித்து வந்தபோது ஒருநாள், விஜய் சார் என்னைப் பற்றி அன்போடு விசாரித்தார். ரொம்ப மென்மையாக பேசினார். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. அதோடு, அஜீத் ரசிகரான நான், இப்போது விஜய் ரசிகனாகவும் மாறி விட்டேன். இப்போது விஜய் யுடன் நடித்துள்ள எனக்கு அடுத்து அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது என்று கூறும் சசி ராஜேந்திரன், ஹீரோ, வில்லன், கேரக்டர் என எந்தமாதிரியான வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக சொல்கிறார்.
0 comments:
Post a Comment