Monday, January 2, 2017

கௌதம் மேனன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிருத்விராஜ்..!


கௌதம் மேனன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிருத்விராஜ்..!



02 ஜன,2017 - 16:18 IST






எழுத்தின் அளவு:








தென்னிந்திய திரையுலகை சேர்ந்த மல்டி ஸ்டார்ஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் இயக்குனர் கௌதம் மேனன். இதில் மலையாள நடிகர் பிருத்விராஜும் ஒருவர் என சொல்லப்பட்டு வந்தது.. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றின்போது, கௌதம் மேனன் படத்தில் தான் நடிக்க இருப்பதை தன்னை அறியாமலேயே ஒப்புக்கொண்டுவிட்டார் பிருத்விராஜ். கௌதம் மேனன் பூர்வீகம், பிறந்தது வளர்ந்தது எல்லாம் கேரளாவாக இருந்தாலும், தமிழ்சினிமா தான் தனது எதிர்காலம் என பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு வந்து இயக்குனராக செட்டிலாகிவிட்டார்.

தனது சொந்த மொழியான மலையாளத்தில் ஒரு படமாவது இயக்கவேண்டும் என்கிற அவரது நீண்டநாள் ஆசை வெறும் கனவாக இருக்கிறது. இப்போது அதற்கு நேரம் கூடி வந்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம் இது மலையாளப்படம் மட்டும் அல்ல.. பிருத்விராஜ் படம் மட்டும் அல்ல. ஆம் பிருத்விராஜுடன் தமிழுக்கு ஜெயம் ரவி, கன்னடத்தில் இருந்து புனீத் ராஜ்குமார் மற்றும் தெலுங்கில் இருந்து சாய் தரம் தேஜ் என நான்கு மொழிகளில் இருந்து நான்கு நடிகர்களை வைத்து மல்டிஸ்டாரர் படமாக நான்கு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். கதாநாயகிகளாக நடிக்க அனுஷ்கா மற்றும் தமன்னாவிடம் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.. தனுஷ் நடித்துவரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை முடித்துவிட்டு இந்தப்படத்தை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment