கண்தானம் செய்ய ஹிருத்திக் முடிவு.?
09 ஜன,2017 - 17:10 IST
நடிகர் ஹிருத்திக் ரோஷன் கண்தானம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், தற்போது காபில் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக யாமி கவுதம் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக்-யாமி இருவருமே கண்பார்வையற்றவராக நடித்திருக்கிறார்கள். இப்படம் இந்தமாதம் 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
சமீபத்தில் ‛காபில்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹிருத்திக், கண்தானம் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது... ‛‛சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் பச்சன் கண்தானம் செய்ததாக விளம்பரம் பார்த்தேன். தானம் அளிக்கப்பட்ட ஒருவரின் கண், மற்றொருவருக்கு இந்த உலகை அழகாக காட்ட உதவுகிறது என்பதை உணர்ந்தேன். அப்போது முதல் கண்தானம் செய்வது பற்றி யோசித்து வருகிறேன்'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment