Friday, January 20, 2017

பீட்டாவில் யாரும் இருந்தால் விலகுங்கள் - நடிகர்களுக்கு நாசர் வேண்டுகோள்


பீட்டாவில் யாரும் இருந்தால் விலகுங்கள் - நடிகர்களுக்கு நாசர் வேண்டுகோள்



20 ஜன,2017 - 17:50 IST






எழுத்தின் அளவு:








பீட்டாவில் நடிகர்கள் யாரும் இருந்தால் உடனே விலகுங்கள் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ள அதேநிலையில் பீட்டாவிற்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதற்கு முன் பீட்டா ஆதரவுடன் போராட்டம் நடத்தியதாக, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்ததாக சில நடிகர்கள் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தொடர்ந்து அவர்களை போராட்டக் குழுவினர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் பீட்டா அமைப்பில் நாங்கள் இல்லை, இல்லவே இல்லை என பல நடிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சென்னை, திநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று(ஜன., 20-ம் தேதி) மவுன போராட்டம் நடந்தது. ரஜினி, கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்றார்கள், விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்கவில்லை.

கூட்டம் முடிந்ததும் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர்... இந்த போராட்டம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான நடந்த போராட்டம் தான். இதில் கலந்து கொண்ட அனைத்து நடிகர்களுக்கும் நன்றி என்றார். அதோடு பீட்டா அமைப்பில் நடிகர்கள் யாரேனும் உறுப்பினராக இருந்தால் உடனடியாக அதைவிட்டு விலகுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.


0 comments:

Post a Comment