Monday, January 9, 2017

கேரள தியேட்டர் ஸ்ட்ரைக்கால் 'பைரவாவுக்கும் பாதிப்பு..!


கேரள தியேட்டர் ஸ்ட்ரைக்கால் 'பைரவாவுக்கும் பாதிப்பு..!



09 ஜன,2017 - 17:50 IST






எழுத்தின் அளவு:








கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள். அதனாலேயே நாளுக்கு நாள் விஜய் படத்தின் கேரள ரைட்ஸ் விலையும் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிகையும் அதிகரித்தே வருகிறது. இந்தமுறையும் பைரவா' படத்தை 6.25 கோடி ரூபாய் கொடுத்து ஐ.எப்.ஏ.ஆர் இன்டர்நேஷனல் என்கிற கைப்பற்றியுள்ளது.

வழக்கமாக விஜய் படங்கள் கேரளாவில் 200 தியேட்டர்களுக்கு குறையாமல் ரிலீஸ் ஆகும். அதனால் இந்தமுறையும் அதிகமான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய இருந்தவர்களுக்கு கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் தியேட்டர்கள் ஸ்ட்ரைக் பெரிய தடைக்கல்லாக மாறியுள்ளது.. இந்தமுறை 'பைரவா'வுக்கு வெறும் 70 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு இன்னொரு காரணம் இந்த ஸ்ட்ரைக்கை முறியடிக்கும் விதமாக எக்சிபிடர்ஸ் சங்கத்தின் துணையில்லாமல் வரும் ஜன-19 முதல் இதுநாள் வரை தேங்கியிருந்த மலையாள படங்களும் ரிலீசாக இருப்பதாலும் விஜய் படங்களுக்கான தியேட்டர்கள் குறைவாகவே கிடைத்துள்ளன என்று சொல்லப்படுகின்றன.. இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே விஜய் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.


0 comments:

Post a Comment