கார்த்தியின் வில்லனாக அபிமன்யு சிங்
09 ஜன,2017 - 14:54 IST
ரத்த சரித்திரம் படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானவர் அபிமன்யு சிங். அதன் பிறகு வேலாயுதம், தலைவா, 10 எண்றதுக்குள்ள படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் டெரர் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் வில்லன். தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்புகள் நடக்கிறது.
இதில், ரகுல் ப்ரீத்தி சிங், கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். கார்த்தி நடித்த காஷ்மோரா படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
0 comments:
Post a Comment