எம்.ஜி.ஆர்., வீடியோ ஆல்பம் வெளியிடுகிறார் பேரரசு
17 ஜன,2017 - 15:16 IST
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை பாடலாக எழுதியுள்ளார் இயக்குனர் பேரரசு. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, சினிமா, அரசியல், மக்கள் சேவை, சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பாடலை எழுதியுள்ளார். அதற்குரிய காட்சிகளையும் இணைத்து வீடியோ ஆல்பமாக அதனை வெளியிடுகிறார். இசை அமைப்பாளர் சங்கர் (கணேஷ்) பேரன் ரசாந்த் இசை அமைத்துள்ளார்.
இதுபற்றி பேரரசு கூறியதாவது: எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. அவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் எழுதி அதை வீடியோவாக தயார் செய்திருக்கிறேன். இந்த வீடியோவை எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, எங்கள் இல்லத்திலேயே வெளியிடலாம் என்று கூறினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகளை பற்றிய வீடியோவை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன். என்றார்.
Advertisement
0 comments:
Post a Comment