பெண் தயாரிப்பாளரை அறைந்த 'தெறி' பட விநியோகஸ்தர்..!
04 ஜன,2017 - 15:57 IST
மலையாள சினிமாவில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான ஒன்றுதான் பிரைடே பிலிம் ஹவுஸ்.. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பவர்கள் குணச்சித்திர நடிகரான விஜய்பாபுவும் நடிகை சான்ட்ரா தாமஸும் தான்.. குழந்தை நட்சத்திராமாக சினிமாவில் அறிமுகமான சான்ட்ர, பின்னாளில் மீண்டும் 'பியிடே' என்கிற படஹ்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் திரையுலகில் நுழைந்தார்.. அதன்பின் நடிகர் விஜய்பாபுவுடன் இணைந்து பிரைடே பிலிம் ஹவுஸ் ஆக மாற்றினார். கடந்த நான்கு வருடங்களில் சுமார் பத்து படங்களுக்கு குறையாமல் தயாரித்துள்ள இவர்கள், மாற படங்களையும் வாங்கி விநியோகம் செய்தும் வந்தார்கள்..
கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த 'தெறி' படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்ததும் இவர்கள் தான்.. நகமும் சதையுமாக எந்தவித சிக்கலும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த இவர்களது நட்பில் சமீபகாலமாக விரிசல் விழுந்தது.. படத்தயாரிப்பு குறித்த கணக்கு வழக்குகளில் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது.. இதனால் இந்த நிறுவனத்தில் பிரிந்துபோகும் முடிவை தான் எடுத்திருப்பதாக விஜய்பாபுவிடம் சில நாட்களாகவே கூறிவந்தாராம் சான்ட்ரா. இந்நிலையில் நேற்று கொச்சியில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு வந்த சான்ட்ரா தாமஸ், இது குறித்து விஜய்பாபுவிடம் பேச ஆரம்பித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, விஜய்பாபுவும் அங்கிருந்த அவரது நண்பர்களும் சான்ட்ராவை அடித்ததாகவும் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.. விஜய்பாபு மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ள சான்ட்ரா தாமஸ். தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் மலையாள திரையுலகில் இந்த நிகழ்வு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment