Wednesday, January 4, 2017

பெபிகர் வாய்ப்பு வந்திருந்தாலும் நடித்திருக்க மாட்டேன் - சுசாந்த் சிங்


பெபிகர் வாய்ப்பு வந்திருந்தாலும் நடித்திருக்க மாட்டேன் - சுசாந்த் சிங்



04 ஜன,2017 - 16:27 IST






எழுத்தின் அளவு:








கை போ சே, ஷுத் தேசி ரொமான்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ‛தோனி' படம் தான் சுசாந்த் சிங் ராஜ்புட்டை மிகவும் பிரபலமாக்கியது. கான் நடிகர்களின் படங்களுக்கு சமமாக தோனி படம் வசூலை குவித்து உள்ளது. தற்போது ராப்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சுசாந்த் சிங். இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் பெபிகர் படத்தில் நடிக்க யாரும் என்னை அழைக்கவில்லை என்று தனது வருத்தத்தை பதிவு செய்தவர். இப்போது அதை அப்படியே மாற்றி பேசியிருக்கிறார்.

அதாவது, பெபிகர் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியிருக்கிறது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‛பெபிகர் படத்தில் யாரும் என்னை அழைக்கவில்லை. ஒருவேளை அப்படியே யாரும் அழைத்திருந்தாலும் கண்டிப்பாக நான் நடித்திருக்க மாட்டேன். பெபிகர் படம் அவர்கள் கூறியது போன்று நவீன யுகத்தின் காதலை வெளிப்படுத்தவில்லை'' என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment