Wednesday, January 4, 2017

அந்த விஷயத்தில் பைத்தியமாக இருப்பது தான் சமந்தாவின் அழகு ரகசியமாம்…!



அந்த விஷயத்தில் பைத்தியமாக இருப்பது தான் சமந்தாவின் அழகு ரகசியமாம்…!








உடற்பயிற்சி விஷயத்தில் தான் ஒரு பைத்தியம் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடுமே தனது அழகின் ரகசியம் என்கிறார் சமந்தா.


ஹீரோவுடன் சேர்ந்து மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடும் காட்சிகளில் நடித்து நடித்து சமந்தாவுக்கு போர் அடித்துவிட்டதாம். அதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார்.


இந்நிலையில் நடிப்பு, திருமணம் பற்றி சமந்தா கூறுகையில்,2016ம் ஆண்டு வெளியான என் படங்கள் நல்ல வசூல் செய்தன. கடந்த ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. மேலும் என்னுடைய காதலை என் பெற்றோர் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.நான் உழைப்பை நம்புபவள்.


அதிர்ஷ்டம் மீது நம்பிக்கை இல்லை. கடின உழைப்பால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். வெற்றி, தோல்வியை பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.கடந்த ஆண்டு கஷ்டங்கள் ஏற்பட்டபோது உண்மையான மகிழ்ச்சி எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். இந்த ஆண்டு 4,5 படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.உடற்பயிற்சி விஷயத்தில் நான் பைத்தியம் மாதிரி. உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடுமே என் அழகின் ரகசியம். என்ன ஆனாலும் சரி உடற்பயிற்சி செய்யாமல் மட்டும் இருக்க மாட்டேன்.






இணையத்தில் டாப் 3 இடங்கள் பிடித்த பதிவுகள்























0 comments:

Post a Comment