ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப் புக்கு தடைவிதிக்க கோரியும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாண வர்களும்,
இளைஞர்களும் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வன்முறைக்கு துளியும் இடம் அளிக்காமல் கட்டுக் கோப்புடன் அமைதி யாக நடைபெறும் இந்த போராட்டம் ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தை ஈர்த் துள்ளது. தமிழ் மாணவர் களின் இந்த அறவழி போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட் டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் “ராட்டை” சின்னமாக்க அறவழிப் போராட்டம் நடந்தது. இன்று மாட்டை சின்னமாக்க அறவழிப் போராட்டம் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மம்முட்டி தனது டுவிட்டரில், துளிகூட வன்முறை இல்லாமல் நடந்த போராட்டம் நாட்டுக்கே எடுத்துக்காட்டு, தமிழக மாணவர்களின் போராட் டத்தை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment