Monday, February 27, 2017

'மகாபாரதம்' இயக்க 10 ஆண்டுகள் ஆகும் - ராஜமௌலி


'மகாபாரதம்' இயக்க 10 ஆண்டுகள் ஆகும் - ராஜமௌலி



27 பிப்,2017 - 18:03 IST






எழுத்தின் அளவு:








இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக வெளிவந்த 'பாகுபலி' படம் இயக்குனர் ராஜமௌலியைப் பற்றி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் பேச வைத்தது. 2015ல் வெளிவந்த முதல் பாகம் திரைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அடுத்து இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் டெக்னிக்கலாக பல விஷயங்கள் மேம்பட்டு இருக்கும் என படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.

சில நாட்களுக்கு முன்பு வெளியான 'பாகுபலி 2' படத்தின் புதிய போஸ்டர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் மோஷன் போஸ்டர் யு டியூபில் நான்கு நாட்களில் 58 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

''மகாபாரதம்' கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது என் லட்சியம். அதே சமயத்தில் உலகத் தரத்திலான தொழில்நுட்ப விஷயங்களுடன் அந்தப் படம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு இன்னும் 10 ஆண்டு காலம் ஆகலாம். அந்த விஷயங்களைக் கற்றுக் கொண்ட பிறகே படத்தை இயக்க நினைக்கிறேன். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு இயக்கப் போகும் படம் பற்றி இதுவரை யோசிக்கவில்லை,” என்று கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment