முழுநேர சினிமா நடிகையாகும் திவ்யதர்ஷினி
21 பிப்,2017 - 11:51 IST
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டி.டி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. நம்பர்-ஒன் தொகுப்பாளினியும் அவர்தான். பொது மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிற வரும் அவர்தான். தற்போது திவ்யதர்ஷினி சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்
சினிமா அவருக்கு புதிதில்லை. 1990ம் ஆண்டு சுபயாத்ரா என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜூலி கணபதி, நளதமயந்தி, விசில் படங்களில் நடித்தார். சரோஜா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.
தற்போது தனுஷ் இயக்கி, தயாரித்து, நடிக்கும் பவர்பாண்டி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சிறப்பு தோற்றம்தான் என்றாலும் கதையின் திருப்புமுனை கேரக்டரில் நடிக்கிறார். "திவ்யதர்ஷினி சூப்பராக நடிக்கிறார். அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும்" என்று தனுஷ் அவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதனால் திவ்யதர்ஷினிக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு முக்கித்துவம் வாய்ந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக கதைகள் கேட்டு வருகிறார். வருகிற ஏப்ரல் 14ந் தேதி பவர் பாண்டி வெளிவருகிறது. அதன் பிறகே புதிய படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. படங்களில் நடித்தாலும் சின்னத்திரையில் அவரது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment