Sunday, February 26, 2017

அஜித் படத்துக்காக தயாராகும் சென்னையின் பிரபல திரையரங்கம்

சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் முக்கியமானது காசி திரையரங்கம். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை காட்சிகள் திரையிடப்படும் திரையரங்குகளில் இதுவும் ஒன்று.

அதேபோல், பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதெல்லாம் நடிகர்கள் இந்த திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க இந்த திரையரங்குக்குத்தான் வருவார்கள். அதனால், இந்த திரையரங்கும் சினிமா பிரியர்களிடையே மிகவும் பிரபலம்.

ரொம்பவும் பழமையான இந்த திரையரங்கம் இப்போது புதுப்பிக்கவுள்ளனர். இந்த திரையரங்கில் சமீபத்தில் வெளியான சிங்கம்-3 படத்தோடு திரையரங்கை மூடிவிட்டு திரையரங்கை புதுப்பிக்க உள்ளார்களாம். புத்தம் புதிதாக இருக்கைகள், உள்புற அலங்காரம், 4K Barco புரொஜெக்டர், புதிய திரை என அனைத்தையும் மாற்றவிருக்கிறார்களாம். அதோடு புதிய உணவகம் ஒன்றையும் நிறுவ உள்ளார்களாம்.

திரையரங்கம் முழுவதுமாக தயாராக 1 மாதத்திற்கும் மேலாக ஆகக்கூடும் என்பதால், இந்த தியேட்டரை அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீசின் போது திரையரங்கை திறக்க இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

0 comments:

Post a Comment