வருகிறது விவேகம் செகண்ட் லுக்
22 பிப்,2017 - 17:26 IST
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தபோது அதில் இடம்பெற்ற அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு அதிக வரவேற்பையும், அதேசமயம் கடும் கிண்டலுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளானது. முக்கியமாக, அஜித்தின் சிக்ஸ்பேக் உண்மை இல்லை, கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்ட வடிவமைப்பு அது என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், விவேகம் படத்தின் இயக்குநரான சிவா "அஜித்தின் உடலமைப்பு கிராபிக்ஸ் அல்ல. உண்மையிலேயே அஜித் மிகவும் சிரத்தை எடுத்து உருவாக்கிய உடலமைப்பு அது" என்று தெரிவித்துள்ளார். அப்படியும் மக்கள் நம்பவில்லை என்பதாலோ என்னவோ, விவேகம் படத்தின் டீசர், மற்றும் டிரைலரில், அஜித் வொர்க்அவுட் செய்து சிக்ஸ்பேக் உடம்புக்கு மாறுவதை காட்சியாக வைக்க திட்டமிட்டுள்ளனர். டீஸர் மற்றும் டிரைலருக்கு முன்னதாக, விவேகம் படத்தில் அஜித்தின் இன்னொரு லுக்கையும் விரைவில் வெளியிட உள்ளனர்.
இதற்கிடையில், விரைவில் பல்கேரியாவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. விவேகம் படத்தை ஜூனில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
0 comments:
Post a Comment