`போகன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி `வனமகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது `நாய்கள் ஜாக்கிரதை’ பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வருகிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள படம் `வனமகன்’. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில், ஜெயம்ரவியுடன், சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரிலீசாக தனுஷ் இயக்கியுள்ள `பவர்பாண்டி’ படமும், லாரன்ஸின் `சிவலிங்கா’ படமும் ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் `ஏஏஏ’ படமும் அதே நாளில் ரிலீசாகும் என்று கூறப்படும் நிலையில், ஜெயம் ரவியின் `வனமகன்’ படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை அறிய காத்திருக்கத் தான் வேண்டும்.
0 comments:
Post a Comment