Wednesday, February 22, 2017

போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்

காமெடியனாக இருந்து ஹீரோவாக களமிறங்கியுள்ள சந்தானம் கைவசம் தற்போது ‘சர்வர் சுந்தரம்’, ‘ ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்க போடு போடு ராஜா‘ ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்கள் உள்ளன. இதில், ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதுவும் போக்கிரி ஸ்டைலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அதாவது ‘போக்கிரி’ படத்தில் விஜய், முதலில் போக்கிரியாக இருந்து ஒவ்வொரு ரவுடிகளிடம் சகஜமாக பழகி, கடைசியில் மெயின் வில்லனை பிடிப்பார். அதேபோல், இந்த படத்தில் சந்தானம், முதலில் தான் போலீஸ் என்பதை காட்டிக் கொள்ளாமல், ரவுடிகளை கடைசியில் எப்படி வீழ்த்துகிறார் என்பதுபோல் கதையை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ‘அனேகன்’ படத்தின் நாயகி அமைரா தஸ்தூர் இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். வாசன் விசுவல் வென்சுவர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

0 comments:

Post a Comment