துயரங்களிலிருந்து மீண்டு வருவேன் - பாவனா
28 பிப்,2017 - 17:58 IST
கேரளாவைச் சேர்ந்த, பிரபல நடிகை, பாவனா, தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொச்சியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்து, அந்த காரில் ஏறிய சிலர், அவரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினர். இதுதொடர்பாக அவரின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாவனாவுக்கு ஆதரவாக திரையுலகினர், அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முதன்முறையாக இன்ஸ்ட்ராகிராமில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛வாழ்க்கை என்னை பலமுறை கீழே தள்ளிவிட்டுள்ளது. நான் பார்க்க நினைக்காத விஷயங்களை காண்பித்துள்ளது. துயரங்களையும் தோல்விகளையும் அனுபவித்தவள். ஆனால் ஒன்று நான் எப்போதும் மீண்டு வருவேன். உங்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment