கருணாசுக்கு கடும் எதிர்ப்பு கார் மீது செருப்பு வீச்சு
26 பிப்,2017 - 10:24 IST
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் கார் மீது செருப்பு வீசப்பட்டது.கருணாஸ், நேற்று முன்தினம் திருவாடானையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அப்போது ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கருணாஸ் மாலை அணிவிக்காமல் திரும்பி சென்றார்.
நேற்று மாலை, திருவாடானை அரசுக்கல்லுாரி ஆண்டு விழாவில் பங்கேற்க கருணாஸ் சென்றார். முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க போகிறார் என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் திரண்டனர். இதில், 16 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கல்லுாரி விழாவை முடித்து விட்டு அந்த வழியாக கருணாஸ் சென்றார். அப்போது ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், கருணாஸ் கார் மீது செருப்புகளை வீசினர். பிறகு, சிலைக்கு கருணாஸ் மாலை அணிவித்தார். அப்போது ஏராளமானோர் திரண்டு கருணாசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, தினமலர் போட்டோகிராபரை முன்னாள் மாவட்ட செயலர் ஆனிமுத்து உட்பட சிலர் தாக்க முயன்றனர்; கேமராவை பறிக்கவும் முயன்றனர். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment