என்ஜிஓ.,வாக நடிக்கிறார் டயானா பென்டி
24 பிப்,2017 - 10:12 IST
நடிகர் பர்கன் அக்தர் நடிக்கும் லக்னோ சென்ட்ரல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை டயானா பென்டி நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த தகவலை டயானாவே உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், லக்னோ சென்ட்ரல் போன்ற வலிமையான கதையில் நடிக்க வேண்டும் என எப்போதும் எனக்கு விருப்பம் உண்டு. தற்போது அந்த ஆசை நிறைவேறி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் கதையை தயாரிப்பாளர் நிகில் அத்வானி கூறியதும் உடனடியாக நான் ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் நான் என்ஜிஓ பணியாளராக நடிக்கிறேன் என்றார். லக்னோ சென்ட்ரல் படத்தை ரஞ்சித் திவாரி இயக்குகிறார். நிகில் அத்வானி தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment