அல்லு அர்ஜூன் போல் ஸ்ரீநிவாஸை ஸ்டைலாக மாற்றும் இயக்குனர்
24 பிப்,2017 - 11:55 IST
பாலகிருஷ்ணாவிற்கு லெஜன்ட், ஜூனியர் என்.டி.ஆருக்கு தம்மு, அல்லு அர்ஜூனுக்கு சரைய்னோடு போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு, பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் சாய் ஸ்ரீநிவாஸிற்கு சிகை அலங்காரம் செய்வதற்கு அல்லு அர்ஜூனின் ஸ்டைலிஸ்ட் சோனியை இயக்குனர் ஸ்ரீனு ஒப்பந்தம் செய்துள்ளாராம். சரைய்னோடு படத்தில் அல்லு அர்ஜூனை மேலும் ஸ்டைலாக மாற்றிய சோனி தற்போது அல்லு அர்ஜூன் நடித்து வரும் டீஜே படத்திலும் ஸ்டைலிஸ்டாக பணியாற்றி வருகின்றார். சோனியை தனது படங்களுக்கு ஸ்டைலிஷ்டாக தொடர்ந்து வைத்து வரும் அல்லு அர்ஜூன் பாஸ்கரை தனது ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளராக நியமித்துள்ளார். இவரை பொய்யபடி தனது புதிய நாயகனுக்கு காஷ்டியூம் டிசைனராக நியமித்துள்ளார். இந்த தகவல் வெளியானதிலிருந்து ஸ்ரீநிவாஸின் புதிய தோற்றத்தைக் காண டோலிவுட் வட்டாரத்தில் ஆவல் எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment