Monday, February 27, 2017

பிளாஷ்பேக்: 14 படங்களை இயக்கிய சித்ராலயா கோபு


பிளாஷ்பேக்: 14 படங்களை இயக்கிய சித்ராலயா கோபு



27 பிப்,2017 - 14:03 IST






எழுத்தின் அளவு:








நாடக உலகிலும், திரைப்பட உலகிலும் மிகவும் பரீட்சையமான பெயர் சித்ராலயா கோபு. ஸ்ரீதர் இயக்கிய படங்களின் வசனம் இவருடையது. அவரிடம் துணை இயக்குனராகவும், சித்ராலயா பட நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றினார். அப்போது பல கோபுக்கள் இருந்ததால் இவர் தன் பெயருக்கு முன்னால் சித்ராலயாவை சேர்த்துக் கொண்டார். சித்ராலயா கோபுவை வெறும் வசனகர்த்தா என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் 14 படங்களை இயக்கி உள்ளார்.

இயக்குனர் ஸ்ரீதர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த நாடகத்தில் காமெடி நடிகனாக நடித்தவர் கோபு. பள்ளி பருவத்திலிருந்தே இருவரும் நண்பர்கள். ஆரம்ப நாட்களில் ஸ்ரீதருக்காக தயாரிப்பு நிறுவனங்களின் படிக்கட்டில் ஏறி வாய்ப்பு தேடியவர். 1967ல் வெளிவந்த கல்யாண பரிசு படத்தின் மூலம் வசனகர்த்தாவானார். அன்று முதல் ஸ்ரீதர் இயக்கியே தென்றலே என்னைத் தொடு படம் வரை ஆஸ்தான வசனகர்த்தாகவாக இருந்தார்.

கோபு சினிமாவில் இருந்தாலும் நாடகத்தின் மீது ஆர்வம் அதிகம். ஸ்ரீதர் சினிமா எடுக்காத காலத்தில் நாடகம் நடத்தச் சென்ற விடுவார். யூனிட்டி கிளப் நாடக சபாவை ஆரம்பித்து நடத்தினார். முத்துராமன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் கோபுவின் நாடகத்தில் நடித்தவர்கள். கோபுவின் திக்கு தெரியாத காட்டில் என்ற நாடகம்தான் வீட்டுக்கு வீடு என்ற பெயரில் சினிமாவானது. இன்னொரு நாடகமான காசேதான் கடவுளடா அதே பெயரில் சினிமா ஆனது. அதை இயக்கியவர் சித்ராலயா கோபு. அதன் பிறகு அத்தையா மாமியா, காலமடி காலம், தைரியலட்சுமி, வசந்தி, டெல்லிபாபு உள்பட 14 படங்களை இயக்கினார் சித்ராலயா கோபு. பெரும்பாலான படங்களில் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்தார்.


0 comments:

Post a Comment