மே மாதத்தில் வீரி தி வெட்டிங் சூட்டிங் : கரீனா
26 பிப்,2017 - 15:48 IST
டைரக்டர் ஷாஷங்கா கோஷ் இயக்கும் வீரி தி வெட்டிங் படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் துவங்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை கரீனா கபூர் கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் வீரி தி வெட்டிங் படத்தின் சூட்டிங்கை மே மாதம் துவங்க உள்ளேன். இப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்த படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. என்றார். வீரி தி வெட்டிங் படத்தில் சோனம் கபூர், ஸ்வர பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment