பாவனாவுக்கு நீதி கிடைக்க உண்ணாவிரதத்துக்கு தயாராகும் மஞ்சு வாரியர்..?
23 பிப்,2017 - 16:11 IST
சமீபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் நடிகை பாவனா.. மலையாள திரையுலகமே கொதித்துப்போய் தங்களது எதிர்ப்பை காட்டியது.. ஆனால் மற்ற யாரையும் விட பாவனாவுக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அதிகம் மனதளவில் பாதிக்க்கப்பட்டுள்ளது நடிகை மஞ்சு வாரியார் தான்.. காரணம் நடிகைகளில் பாவனா தான் மஞ்சுவின் உயிர்த்தோழியாக இருந்துவந்தார். தனது பேசனல் விஷயங்களை எல்லாம் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம் காட்டி வந்தனர்.
தற்போது இந்த கொடூர நிகழ்வில் குற்றவாளிகள் ஈடுபட்ட பல்சர் சுனில் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் யாரோ ஒரு பிரபலத்தின் தூண்டுதல் உள்ளதாக ஒரு சந்தேகம் உலவிக்கொண்டுள்ளது. அதனால் பாவ்னாவுக்கான சரியான நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளி யார் என்பதையும் கண்டுபிடிக்க வலியுறுத்தி, கேரள தலைமைச்செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க மஞ்சு வாரியர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் இன்னும் மஞ்சு வாரியரால் உறுதிப்படுத்தப்பட வில்லைஎன்றாலும் அவரது நட்புவட்டாரத்தில் இது குறித்து பேசியுள்ளாராம் மஞ்சு.. இதில் மஞ்சுவின் பழி தீர்க்கும் படலமும் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள்.. அதாவது பாவனா விவகாரத்தின் பின்னணியில் நடிகர் திலீப்பின் கை இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது அல்லவா..? ஒருவேளை அப்படி இருந்தால் அதன்மூலம் தன்னை விவாகரத்து செய்த, இன்னொரு நடிகையை திருமணம் செய்துகொண்ட தனது முன்னாள் கணவர் திலீப்பின் முகமூடியை கிழிக்கலாம், அவரது இமேஜை தகர்க்கலாம் என்பதுதான் மஞ்சுவின் பிளானாம்.
0 comments:
Post a Comment