பொட்டு பாடல்கள் மலேசியாவில் வெளியீடு
26 பிப்,2017 - 12:02 IST
சாட்டை படத்தை தயாரித்த ஷலோம் ஸ்டூடியோ அதன்பிறகு வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சவுகார்பேட்டை என்ற படத்தை தயாரித்தது. ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடித்த அந்தப் படம் பெரும் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு அதே இயக்குனரை கொண்டு தற்போது தயாரித்து வரும் படம் பொட்டு. இதில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர் அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். இனியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்த விழாவில் அம்ரிஷ், இனியா, நமிதா, ஜெயசித்ரா, பாடலாசிரியர் சொற்கோ, ஒளிப்பதிவாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். பாடல் வெளியீட்டு விழாவையட்டி அம்ரீஷின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் மலேசிய தமிழ் சினிமா ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோ தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருப்பதால் கலந்து கொள்ளவில்லை. இன்னொரு நாயகி சிருஷ்டி டாங்கேவும் கலந்து கொள்ளவில்லை.
Advertisement
0 comments:
Post a Comment