அழுதுவடிய விருப்பமில்லை!
23 பிப்,2017 - 00:54 IST
அச்சம் என்பது மடமையடா படத்தில், இளம் ரசிகர்களை கவர்ந்த, கேரளத்து பைங்கிளி மஞ்சிமா மோகனுக்கு, தமிழில் அடுத்தடுத்து படங்கள், ஒப்பந்தமாகி வருவது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வரும், சத்திரியன் படம் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'எனக்கு வெயிட்டான, அழுதுவடியும் கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. மென்மையான, கலர்புல்லான, ஜாலியான பெண்ணாகவே நடிக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில், என் ரோல்மாடல், நடிகை நயன்தாரா தான்' என்கிறார் மஞ்சிமா.
Advertisement
0 comments:
Post a Comment