பார்வையற்ற பெண்ணை அறிமுகம் செய்யும் ஜிவி பிரகாஷ்
25 பிப்,2017 - 16:48 IST
நடிகராக பரபரப்பாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ்மகுமார் இன்னொரு பக்கம் இசையமைப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். கேரளாவை சேர்ந்த பார்வையற்ற பின்னணிப் பாடகியான வைக்கம் விஜயலட்சுமியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இசை அமைப்பாளர் டி.இமான்.
இவரை தொடர்ந்து ஜோதி என்ற மற்றுமொரு பார்வையற்ற பின்னணிப் பாடகியை அறிமுகப்படுத்துகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'அடங்காதே' படத்திற்காக சிவகங்கா எழுதிய பாடலைத்தான் ஜோதியை பாட வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
0 comments:
Post a Comment