திருப்பம் தர வரும் தியாகராஜன்
23 பிப்,2017 - 11:41 IST
ஜீவா ஷங்கர் இயக்கத்தில் எமன் படத்தில் எக்ஸ் எம் எல் ஏ கருணாகரனாக , நடிப்பில் அசத்தி இருக்காராம் தியாகராஜன். படத்தயாரிப்பு மற்றும் சில பிசினஸ் இல் பிஸியாக இருப்பவர் ,இந்த கதை கேட்டதுமே நடிக்க ஒத்துகொண்டார். அரசியல் களத்தில் இவரது சாணக்கிய தனமே எமன் படம் .எதிரியை அடித்து நொறுக்கி, வசனம் பேசுவதை விட , அமைதியாக இவரது மைன்ட் கேம் ,அடுத்தது அடுத்தது என்று தாண்டி யோசிக்கும் இவரது புத்திசாலிதனத்தை அழகான அரசியவாதி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுக்க வைத்திருக்கிறார்.
இயக்குனர் ,கருப்பு ,காவி என்று கலர் கலர் வேஷ்டிகளோடு அந்த எம் எல் ஏ ரோலுக்கு அவ்ளோ பொருந்தி உள்ளாராம். விஜய் ஆண்டனியோடு இவர் வரும் காட்சிகள் பட்டையை கிளப்பும் என்கிறது பட குழு . தற்போதைய அரசியல் நிலவரத்துக்கு இந்த படம் ரொம்ப பொருத்தமாம். இந்த படம் பார்த்த பிறகு அரசியலில் இவ்ளோ இருக்கா , அரசியல்வாதிகள் இப்படி எல்லாம் இருப்பாங்களா என்று பல சஸ்பென்ஸ் காட்சிகள் பக்கத்தில் இருந்து பார்த்த ஒரு அனுபவம் கிடைக்குமாம்.
0 comments:
Post a Comment