Saturday, February 25, 2017

இளைஞர்கள் அரசியல் புரட்சி செய்ய வேண்டும்! -நடிகர் சாய் சக்தி


இளைஞர்கள் அரசியல் புரட்சி செய்ய வேண்டும்! -நடிகர் சாய் சக்தி



26 பிப்,2017 - 09:35 IST






எழுத்தின் அளவு:








பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் சாய் சக்தி. சென்னை மெரினாவில் நடந்த இளைஞர் போராட்டதில் கலந்து கொண்ட அவர், இளைஞர்கள் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்கிறார்.

அதுபற்றி சாய் சக்தி கூறுகையில், தற்போது நான் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. பிரியமானவள் சீரியலில் நடிக்க அழைத்தனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். காரணம், தற்போது துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மாடலிங், ராம்போக் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அதுதவிர காஸ்டி யூம், மேக்கப் கோர்ட்ஸ் எடுத்து படித்து வருகிறேன். அடுத்தபடியாக சீரியல்களில் மீண்டும் நடிப்பேன். ஆனால் எனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு இதுவரை நடிக்காத மாறுபட்ட கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிப்பேன்.

மேலும், சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எனக்கு இப்போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. காரணம், தமிழ்நாட்டு மக்களெல்லாம் இனிமேல் அரசியல்வாதிகள் இல்லாமல் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவர்கள் எம்எல்ஏவாகி அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதனால் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து மக்களுக்காக உழைக்கப்போகிறேன். இளைஞர்கள் நினைத்தால் இந்த நாட்டில் பெரிய மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டம் நிரூபித்துவிட்டது. அதனால் இளைஞர்களின் அடுத்த போராட்டம் அரசியல் களத்தில் இறங்கி புரட்சியை ஏற்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார் சாய்சக்தி.


0 comments:

Post a Comment