Sunday, February 26, 2017

விஷாலின் முடிவில் மகிழ்ச்சி : கங்கனா ரனாவத்


விஷாலின் முடிவில் மகிழ்ச்சி : கங்கனா ரனாவத்



26 பிப்,2017 - 15:33 IST






எழுத்தின் அளவு:








டைரக்டர் விஷால் பரத்வாஜ், தான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் பல சீன்களை தூக்கி விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. கதையை மிகத் தெளிவாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் காட்சிகளை நீக்கியதாகவும் கூறப்பட்டது. அவ்வாறு நீக்கப்பட்ட சீன்கள் அனைத்தும், நடிகை கங்கனா ரனாவத் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய சீன்களாம். இது பற்றி சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கங்கனாவிடமே கேட்கப்பட்டது.

விஷாலின் முடிவு பற்றி பதிலளித்த கங்கனா, நீங்கப்பட்ட சீன்களில் பல எனக்கும் மிகவும் பிடித்தமானவை. நான் மிகவும் முக்கியத்துவம் அளித்து, சிரத்தை எடுத்து நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. எனது கேரக்டருக்காக என்னை மிகவும் தயார் செய்து, தத்ரூபமாக நான் நடித்திருந்தது படத்தில் பார்த்த போது தான் தெரிந்தது. இருந்தும் அந்த சீன்களை ஏன் நீக்கினார் என விஷால் பரத்வாஜ் என்னிடம் விளக்கினார். எடிட்டிங் என்பது நியாயமானது. அது படத்திற்கு மிகவும் அவசியம். அப்போது தான் படத்தை முறையானதாக மாற்ற முடியும்.

ஆனால் நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து, எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய காட்சிகள், படத்திற்கு சிறப்பானதாக அமையும் எனது நினைத்த காட்சிகள் நீக்கப்பட்டதால் எனது நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து விட்டன. இப்போது எனது வேலையை முடித்து விட வேண்டும். அதற்கான பாராட்டையை எதிர்பார்க்கக் கூடாது என இப்போது நினைக்கிறேன். ஆனால் ரசிகர்கள் இதை விரும்புவார்கள் என நினைக்கிறேன். விஷால் பரத்வாஜின் முடிவில் நான் மகிழ்கிறேன் என்றார்.


0 comments:

Post a Comment