Sunday, February 26, 2017

ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற லா லா லேண்ட்

La la land movie won six oscar awardsசினிமா உலகில் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள்.


தற்போது கடந்தாண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லா லா லேண்ட் படத்துக்கு சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.


காதலை இசை மூலம் வெளிப்படுத்தும் திரைப்படமாக ‌அமைந்த லா லா லேண்ட படத்தை இயக்கிய டேமியன் சாஜெல்லேவுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது.


நடனத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த லா லா லேண்ட் கதாநாயகி எம்மா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.


இசைக்கும், பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இரு பிரிவுகளிலும் விருது வழங்கப்பட்டது.


இதே போல் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதையும் லா லா லேண்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் லினஸ் சாண்ட்க்ரீன் தட்டிச் சென்றார்.


மொத்தம் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட லா லா லேண்ட் திரைப்படம் 6 விருதுகளை வென்றது.


La la land movie won six oscar awards

0 comments:

Post a Comment