மகேஷ் பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் பட டைட்டில் 'சம்பவாமி யுஹே யுஹே'
22 பிப்,2017 - 09:51 IST
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். 70% படப்பிடிப்புகள் முடிந்த நிலையிலும் இப்படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. சாய் தரன் தேஜ், ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடிக்கும் வின்னர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பிவி பிரசாத் 2017ல் தாகூர் மது வின்னர், மிஸ்டர், சம்பவாமி யுஹே யுஹே என மூன்று படங்களை தயாரிக்கும் வாய்ப்பை தனக்கு தந்ததாக கூறினார். தாகூர் மதுவுடன் இணைந்து பிவி பிரசாத் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் மகேஷ் பாபு நடிக்கும் படம். இத்தகவல் வெளியானதிலிருந்து மகேஷ்பாபுவின் 23வது திரைப்படத்தின் டைட்டில் சம்பவாமி யுஹே யுஹே என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
0 comments:
Post a Comment