மீண்டும் காமெடி ஹீரோவான சுனில்
25 பிப்,2017 - 10:00 IST
ஒனமல்லு, மல்லி மல்லி இதி ராணி ரோஜூ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கரந்தி மாதவ், அடுத்து இயக்கி வரும் உங்கரால ராம்பாபு எனும் திரைப்படத்தில் சுனில் நாயகனாக நடித்து வருகின்றார். கமர்ஷியல் திரைப்படமான இப்படத்தில் சுனில் வழக்கம் போல் நகைச்சுவையான ஹீரோ வேடம் ஏற்றுள்ளாராம். காமெடியான இருந்து ஹீரோவாக மாறிய சுனில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி ஹீரோவாகவே நடித்து வந்தார். இடையில் மாஸ் ஹீரோவாக முயற்சித்து அவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால் மீண்டும் காமெடி ஹீரோவாகவே சுனில் மாறியுள்ளாரம். சுனிலுக்கு ஜோடியாக நடிகை மியா ஜார்ஜ் உங்கரால ராம்பாபு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை மகாசிவராத்திரையை முன்னிட்டு இன்று(பிப் 24) படக்குழு வெளியிட்டது. 90% படப்பிடிப்பை முடித்த படக்குழு மார்ச் இரண்டாம் வாரத்தில் உங்கரால ராம்பாபு படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
0 comments:
Post a Comment