சசிகுமாரை வைத்து ‘குட்டிப்புலி’ என்ற படத்தை இயக்கிய முத்தையாவுக்கு அதுதான் தமிழ் சினிமாவில் முதல் படம். அப்படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து ‘கொம்பன்’, விஷாலை வைத்து ‘மருது’ ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், முத்தையா தனது நான்காவது படமாக மீண்டும் சசிகுமாரை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கொடி வீரன்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் 25-ந் தேதி சிவகங்கையில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.
‘மருது’ படத்திற்கு பிறகு முத்தையா, சூர்யாவை வைத்து அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தொடங்காமலேயே போய்விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment