Tuesday, February 28, 2017

'வேதாளம்' - ஹிந்தி டப்பிங்கிலும் புதிய சாதனை


'வேதாளம்' - ஹிந்தி டப்பிங்கிலும் புதிய சாதனை



28 பிப்,2017 - 14:46 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகத்தில் தற்போது படங்களின் வசூல் விவரம் ஒரு மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுவதைப் போல, யு டியூபிலும் எவ்வளவு பார்வைகளைப் பெறுகிறது என்பதும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

யு டியூப் சாதனையில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்கள்தான் அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வருகிறது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் யு டியூபில் வெளியான படங்களின் டீசர், டிரைலரை யாரும் கண்டு கொண்டதேயில்லை. ஆனால், இப்போதோ ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வை என பெருமை பேசிக் கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு அஜித் நடித்து 2011ல் யு டியூபில் வெளியான 'மங்காத்தா' டீசருக்கு 5 லட்சம் பார்வைகளும், 2012ல் யு டியுபில் வெளியான 'பில்லா 2' டீசரை வெறும் 21 ஆயிரம் பார்வைகளும் மட்டுமே கிடைத்துள்ளன. 2013ல் வெளிவந்த 'ஆரம்பம்' டீசர்தான் 26 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், 2014ல் வெளிவந்த 'வீரம்' டிரைலருக்கு 5 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. அடுத்து 'என்னை அறிந்தால்' டீசர் 55 லட்சம் பார்வைகளைப் பெற்றது. 'வேதாளம்' டீசர் கூட 67 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. இருந்தாலும் முதல் முறையாக 1 லட்சம் லைக்குகளைக் கடந்த டீசராக அது அமைந்தது.

'வேதாளம்' டீசர், பாடல்களிலிருந்துதான் கடந்த இரண்டு வருடங்களாக யு டியூபில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மோதல் எழுந்து வருகிறது. 'வேதாளம்' படத்தின் 'ஆலுமா... டோலுமா...' பாடலின் லிரிக் வீடியோ 1 கோடியே 51 லட்சம் பார்வைகளையும், பாடல் வீடியோ 1 கோடியே 68 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.

இப்போது 'வேதாளம்' படத்தின் ஹிந்தி டப்பிங்கின் முழு படம் யு டியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு தமிழ்ப் படத்தின் ஹிந்தி டப்பிங் வீடியோவை இவ்வளவு பேர் பார்ப்பது இதுவே முதல் முறை.

அஜித் ரசிகர்கள் அடுத்து 'விவேகம்' பட டீசருக்கு வெயிட்டிங்....!


0 comments:

Post a Comment