பாலியல் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் கிரிஜாஸ்ரீ
24 பிப்,2017 - 11:40 IST
சத்யம் தொலைக்காட்சியில் பள்ளிக்கூடம் என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் கிரிஜாஸ்ரீ. அதன் பிறகு ஜெயா டி.வியில் தாய் மண்ணின் சாமிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தூர்தர்ஷினில் பழைய பாடல்களை அதன் பின்னணியோடு விளக்கி ஒளிபரப்பினார். அடுத்து வேந்தர் டி.வியில் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடைசியாக வேந்தர் டி.வியில் பாலியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டார்.
சமீபத்தில், சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்த தனது விமர்சனங்களை வீடியோவில் பேசி பரபரப்பு கிளப்பினார். கிரிஜா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியெல்லம் வெவ்வேறவானவை. இந்த நிகழ்ச்சியைத்தான் இவரால் தொகுத்து வழங்க முடியும் என்கிற இமேஜ் வட்டத்துக்குள் சிக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். பாலியல் தொடர்பான நிகழ்ச்சின்னா அது கிரிஜாதான் என்கிற இமேஜ் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்போது சின்ன பிரேக் எடுத்திருக்கிறார். விரைவில், அடுத்து ஒரு புதிய நிகழ்ச்சியோடு வருகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் கிரிஜாஸ்ரீ. அரசியலை கடுமையாக விமர்சிக்கும் கிரிஜாஸ்ரீக்கு நேரடி அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லையாம்.
0 comments:
Post a Comment