அதிக டிஸ்லைக்குகளைப் பெற்ற அல்லு அர்ஜூனின் டீஜே டீசர்
27 பிப்,2017 - 13:42 IST
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடித்து வரும் டீஜே படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று வெளிவந்தது. அல்லு அர்ஜூன் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த டீசர் யூடியூப்பில் வெளியிடப்பட்டதிலிருந்து லைக்ஸ்குகளுக்கு இணையாக டிஸ்லைக்ஸ்களையும் அள்ளியது. தற்போதைய நிலையில் 103871 லைக்ஸ்கள் பெற்றுள்ள டீஜே டீசர், 87,241 டிஸ்லைக்ஸ்கள் பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட டீசர்களில் அதிக டிஸ்லைக்ஸ்களை பெற்ற டீசர் என்ற பெயரையும் டீஜே பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட டீசர்களில் அதிக டிஸ்லைக்ஸ்களை பெற்ற டீசராக அஜித்தின் வேதாளம் பட டீசர் இது வரை இருந்தது. அதையும் தாண்டி அல்லு அர்ஜூனின் டீஜே டீசர் டிஸ்லைக்ஸ்களை குவித்து முதல் இடத்தை பெற்றுள்ளது. இத்தகவல் படக்குழுவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் டீஜே படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.
0 comments:
Post a Comment